கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அனுமதி இன்றி இயங்கிய 'அக்ரி நெஸ்ட்' என்ற உல்லாச ஓய்விடத்தில் போதைப் பொருள் புழங்கி ரகளையில் ஈடு பட்ட 159 பேரை போலிஸ் கைது செய்துள்ளது.
விருந்து ஏற்பாட்டாளர்கள், உல்லாச ஓய்விட உரிமையாளர் உட்பட மேலும் 6 பேரைக் கைது செய்துள்ள போலிஸ், அவர்கள் மீது வழக்குப்பதியவும் முடிவு செய்துள்ளது.
பொள்ளாச்சி சேத்துமடையில் கணேசன் என்பவருக்குச் சொந்த மான அந்த உல்லாச இடத்தில் மது விருந்து கொண்டாட்டம் நடக் கப்போவதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த சிலர் சமூக வலைத்தளத் தில் விளம்பரம் செய்தனர்.
கொண்டாட்டத்திற்கு வருவ தாகப் பதிந்துகொண்ட பலரும் அங்கு சென்று போதை மாத்திரை கள், மருந்துகளை உட்கொண்ட தாகவும் போதை தலைக்கேறி ரகளையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
அவர்கள் தாங்க முடியாத அளவுக்கு மூர்க்கமாக ரகளை செய்ததால், கோவை போலிசிடம் புகார் தெரி விக்கப்பட்டது.
பிடிபட்டவர்களில் பெரும்பா லானவர்கள், கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் பயிலும் கேரள மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

