சுடச் சுடச் செய்திகள்

மற்றவரின் நெல்லை காட்டி ரூ.1.35  கோடி மோசடி; விசாரணை

மதுரை: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மற்றவர்களின் நெல் மூட்டைகளை அடைமானமாக வைத்து இரண்டு பேர் ரூ. 1.35 கோடி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று கூறப்படும் சம்பவம் பற்றி சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ராஜபாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தன்னிடம் 7,600 மூட்டை நெல் இருப்பதாகவும் அதை அடைமானமாக வைத்துக்கொண்டு தனக்குக் கடன் தரும்படியும் கேட்டதை அடுத்து கடந்த 2017ல் அவருக்கு ஒரு வங்கி மொத்தம் ரூ. 96 லட்சம் கடன் வழங்கியது. 

அதேபோல ராஜபாளையத்தைச் சேர்ந்த சுவாதிக் என்பவர் கடன் கேட்டதை அடுத்து 3,600 நெல் மூட்டைகளை அடைமானமாக வைத்துக்கொண்டு இவருக்கு அதே வங்கி ரூ. 39 லட்சம் கடன் கொடுத்தது.

அப்போதைக்கு அப்போது அதி காரிகள் நெல் மூட்டைகளைப்  பரிசோதித்து வந்தார்கள். இந்த நிலையில், நெல் மூட்டைகளின் வரிசையில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து அதிகாரிகளுக்குச் சந் தேகம் கிளம்பியது.

விசாரணை நடத்தியதில் வேறு யாருக்கோ சொந்தமான நெல் மூட்டைகளை தங்களுக்குச் சொந்தமானவை என்று காட்டி அந்த இருவரும் வங்கியில் கடன் வாங்கி இருப்பது தெரியவந்தது. 

நெல் மூட்டைகள் கார்த்திக், சுவாதிக் இருவருக்கும் சொந்த மானவை என்று சான்றிதழ் வழங் கியதாக தனியார் நிறுவனம் ஒன் றின் மீது போலிசில் புகார் செய்யப் பட்டது. இந்த விவகாரம் தொடர் பில் மொத்தம் 18 பேர் மீது வழக் குத் தொடுக்கப்பட்டது. 

ஆனால் போலிஸ் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வங்கி தெரிவித்தது. 

வங்கி இதில் தீவிரமாக இருந் ததை அடுத்து சென்ற ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதிதான் போலி சார் முதல் குற்றப்பதிவு செய்த தாகவும் வங்கி சார்பில் தெரிவிக் கப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மோசடி பற்றி விசாரிக்க சிபிஐ போலிசாரை எதிர்மனுதாரராகச் சேர்ப்பதாக வும் சிபிஐ இந்த வழக்கை விசா ரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரபரப்பாக உத்தரவு பிறப்பித்தார்.  

யாரோ பயிர் செய்து விளைவித்த நெல்லை தன்னுடையது என்று சொல்லி இரண்டு பேர் ரூ. 1.35 கோடி கடன் வாங்கி மோசடி செய்து இருக்கிறார்கள் என்று வழக்கு நடக்கிறது. படம்: தமிழக ஊடகம் 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon