நற்பணி தண்ணீர்ப் பந்தலில் டம்ளர் திருடும் போலிஸ்காரர்கள்

நற்பணி தண்ணீர்ப் பந்தலில் டம்ளர் திருடும் போலிஸ்காரர்கள்

1 mins read

புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் இப் போதைய கோடை காலம் வழக்கத் துக்கு மாறாக மிகவும் அனலாக இருப்பதன் காரணமாக, நற்பணி அமைப்பினர் மாநிலத்தின் பல இடங்களிலும் தண்ணீர்ப் பந்தல் அமைத்து மக்களின் தாகம் தீர்த்து வருகின்றனர்.

பல இடங்களிலும் கால்நடை களுக்கும் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், புதுக்கேட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேற்பனைக்காடுபேட்டை பகுதி யில் செயல்பட்டு வந்த தண்ணீர் பந்தலில் தண்ணீர் குடிக்க வைக் கப்பட்டு இருந்த எவர்சில்வர் டம்ளர் அடிக்கடி காணாமல் போனது. தொடர்ந்து இப்படி நடந்துவந்ததால் பிளாஸ்டிக் டம்ளர் வைக்கப்பட்டு, திருட்டைக் கண்டுபிடிக்க அங்கு பிரத்தியேக படச்சாதனமும் பொருத்தப்பட்டது.

அந்தப் படச்சாதனத்தை ஓட விட்டு அதில் பதியப்பட்டு இருந் ததைப் பார்த்தபோது, தண்ணீர் பந்தலில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் டம்ளரை இரவு சுற்றுக் காவல் பணியில் வந்த பேலிசார் எடுத்துச் சென்றது தெரிந்தது.

அந்தக் காட்சியைச் சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் பரபரப்பாகப் பகிர்ந்துகொண்டு வருகின்றனர். அதைக் கண்டு அப்பகுதி மக்கள் வேதனை, அதிர்ச்சி, கோபமடைந்துள்ளனர்.