சேலம்: சேலத்தில் ஓடும் ரயிலில் நிகழ்ந்த நகைப்பறிப்பு சம்பவங்கள் தொடர்பில் ரயில்வே போலிஸ் 20 பேரை விசாரித்து வருகிறது.
அங்கு ஒரு ரயில் நிலையம் அருகே பாலம் கட்டும் பணி நடப்பதால் அந்த வழியில் ரயில் கள் 20 கி.மீ. வேகத்தில்தான் செல்கின்றன. ரயில்கள் மெதுவாக செல்வதை அறிந்த கொள்ளையர் கள், நள்ளிரவில் அந்த வழியே சென்ற நான்கு ரயில்களில் ஏறி 10 பெண்களிடம் இருந்து சுமார் 30 பவுன் தங்க நகைகளைப் பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக 20 பேரை பிடித்து போலிஸ் விசாரித்து வருகிறது.

