பாம்பு காதலன் காத்த சாரை

பாம்பு காதலன் காத்த சாரை

1 mins read
4463e493-8b35-4f0b-97af-67a6076efcea
-

கோவை: கோவை மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன், 32, என்பவர் எப்போதுமே பாம்பைக் கண்டால் அதைப் பிடித்து வனத் துறையிடம் ஒப்படைப்பார்.

'பாம்பு காதலன்' என்று கூறப்படும் அவருடன் கைத்தொலைபேசியில் சென்ற சனிக்கிழமை தொடர்புகொண்ட ஒருவர், தன் வீட்டில் புகுந்துவிட்ட பாம்பைப் பிடித்து அப்புறப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

அந்த வீட்டிற்குச் சென்று அங்கு 6 அடி சாரைப் பாம்பைப் பிடித்த சுரேந்திரன், தான் பிடித்த பாம்புக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததைக் கண்டு அதை எடுத்துக்கொண்டு 90 கி.மீ. மோட்டார்சைக்கிளில் சென்று சத்தியமங்கலம் புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் அசோகனைச் சந்தித்தார்.

பாம்பின் உடலில் எட்டு இடங்களில் அறுவை சிகிச்சை நடந்தது. கட்டிகள் அகற்றப்பட்டன. பாம்பு உயிர் பிழைத்தது. பாம்புக் காதலனும் மருத்துவரும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.