10 மணி நேரத்தில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு; பெண் கைது

10 மணி நேரத்தில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு; பெண் கைது

2 mins read

பொள்ளாச்சி: தனக்கு பிறந்த குழந்தை குறைபிரசவத்தில் பிறந்து இறந்துவிட்டதை அடுத்து, இந்த விஷயத்தை கணவர் குடும்பத்தினரிடம் கூறினால் தனது வாழ்க்கை பாழாகிவிடும் என பயந்த பெண் ஒருவர், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்திருந்த பச்சிளம் குழந் தையைக் கடத்திச் சென்றார்.

ஆண் குழந்தையைக் கடத் திச் சென்ற அந்தப் பெண்ணைப் போலிசார் 10 மணி நேரத்தில் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், ஆனை மலை அருகே உள்ள நரிக் கல்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன், 40, கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவி, 30.

இவர்களுக்கு நித்தின், 6, பிரசாந்த், 3, என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தேவிக்கு 3வது முறையாக பொள்ளாச்சி அரசு மருத்துவ மனையில் குழந்தை பிறந்தது.

அந்தக் குழந்தை திடீரென்று காணாமல் போனதால் பொள் ளாச்சி காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து 10 மணி நேரத்தில் குழந்தை மீட்கப்பட்டது.

கைதான பெண் மாரியம்மாள், 34, அளித்த வாக்குமூலத்தில் "எனது கணவர் லிங்கசாமி. எங் களுக்குக் கடந்த 5 ஆண்டு களுக்கு முன் திருமணம் நடந் தது. அண்மையில்தான் கர்ப்பம் அடைந்தேன். பிரசவத்துக்காக உறவினர் வீட்டுக்குச் சென்றேன்.

"அங்கு குறை பிரசவத்தில் ஆண் குழந்தை இறந்து பிறந்தது. இதனை எனது கணவரிடம் மறைத்துவிட்டேன். அவர் ஆண் குழந்தை உயிருடன் இருப்பதாகவே கருதினார். மேலும் எனக்குக் குழந்தை இல்லா ஏக்கம் இருந்தது. கணவரிடம் எப்படியாவது குழந் தையைக் காண்பிக்க வேண்டும் எனக் கருதி கடத்திச் சென்றேன்," என்று கூறினார்.