மகாபலிபுரம்: பொள்ளாச்சியைத் தொடர்ந்து சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதிகளிலும் நள்ளிரவு நேரத் தில் மது, போதை விருந்துடன் ஆட்டம் பாட்டம் என கும்மாளம் போட்ட 160 பேரை காவல்துறை யினர் சுற்றிவளைத்துக் கைது செய்தனர்.
சொகுசு விடுதிக்குள் எந்த ஒரு அனுமதியும் இன்றி சட்ட விரோதமான முறையில் போதை யுடன் ஆட்டம் போட்ட இளைஞர் களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த இரவு விருந்தில் பங்கேற்ற 7 பெண்கள் உட்பட 160 ஊழியர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங் களில் பணியாற்றி வருபவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இரு நாட்களுக்கு முன்புதான் பொள்ளாச்சி, யானைமலை அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த தனியார் தங்கும் விடுதியில் மது, போதை விருந்தில் ஈடுபட்ட கேர ளாவைச் சேர்ந்த 159 மாண வர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
சமூக வலைத்தளம் மூலம் கொண்டாட்டத்திற்கு வருவதாகப் பதிந்துகொண்ட பலரும் அங்கு சென்று போதை மாத்திரைகள், மருந்துகளை உட்கொண்ட தாக வும் போதை தலைக்கேறி ரகளை யில் ஈடுபட்டதாகவும் கூறப்படு கிறது. இவர்களில் பலரும் கோவையில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் வியப்பை ஏற்படுத்திய நிலையில் இதேபோன்ற மற்றொரு சம்பவம் இப்போது காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அருகே உள்ள பட்டிபுலம் பகுதியில் நடந்துள்ளது.
பட்டிபுலத்தில் 100க்கும் மேற் பட்ட ரௌடிகள் ஒன்றுகூடி இருப்பதாக திருவள்ளூர் காவல் நிலையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நள்ளிரவில் 100க்கும் மேற்பட்ட காவல் துறை யினர் விடுதியைச் சுற்றி வளைத்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது விடுதிக்குள் ஏராளமானோர் மதுவுடன் போதை அருந்திக்கொண்டிருந்தனர்.

