வாழ்விலும் சாவிலும் இணைபிரியாத தம்பதிகள்

வாழ்விலும் சாவிலும் இணைபிரியாத தம்பதிகள்

1 mins read

கோவை: ஒருமித்த கருத்துடன் இணைபிரியாமல் வாழ்ந்து வந்த வயதான தம்பதிகள் தங்கள் சாவிலும் இணை பிரியாமல் உயிர் துறந்துள்ளனர்.

கோவை பாப்பநாயக்கன் பாளையம், பழையூரைச் சேர்ந்த வர் திருப்பதி, 74. இவருடைய மனைவி ஜீவா, 65. இவர் களுக்குத் திருமணம் முடிந்து 50 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். அனைவருக் கும் திருமணமாகி விட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதி உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் வீடு திரும்பினார். நேற்று காலை குளிக்கச் சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

அப்போது கணவரின் உடல் அருகே உட்கார்ந்து அழுதுகொண்டிருந்த ஜீவாவும் திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

இதனையடுத்து திருப்பதி யின் உடல் அருகிலேயே அவரது மனைவி ஜீவாவின் உடலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "திருப்பதி, ஜீவா தம்பதியினர் இருவருக்கும் இடையே சண்டையோ, முரண்பாடுகளோ இருந்ததில்லை. ஒரு வருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தனர். எங்கு சென்றாலும் அக்கம்பக்கத்தில் உள்ளோர் அதிசயிக்கும் வகையில் சேர்ந்தே செல்வார்கள். மரணத்திலும் இத்தம்பதிகள் ஒன்றிணைந்துவிட்டனர்," என்றனர்.