கைபேசி திருடர்கள் பங்கேற்ற அமாவாசை பூசை

சென்னை: சென்னையில் ஏழு கிணறு, கொருக்குப்பேட்டை, வண் ணாரப்பேட்டை, புளியந் தோப்பு உள்ளிட்ட இடங்களில் அதிகாலை நேரங்களில் தனியாக நடந்து செல்லும் பெண்களைக் குறிவைத்து கைபேசி, பணப்பை யைப் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதன் தொடர்பில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்த போலிசார் இருவரைக் கைது செய்தனர். 

கைதானவர்கள் திருவொற்றி யூரை சேர்ந்த அரவி என்ற அர விந்தன், புளியந்தோப்பை சேர்ந்த ஓசை மணி எனத் தெரிகிறது. 

இவர்கள் காலையில் போதை யுடன் முக்கிய சாலைகளின் சந்திப்பில் இருச்சக்கர வாக னங்களில் சுற்றி வந்துள்ளனர். அப்போது தனியாக நிற்கும் பெண்களின் கைபேசி, கைப்பை யைப் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளனர். ஒரே நாளில் நான்கு அல்லது ஐந்து இடங்களில் வழிப்பறிகளில் ஈடு பட்டு, பின்னர் தலைமறைவாகி ஆந்திரா சென்று விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

கடந்த 30ஆம் தேதியும் ஏழுகிணறு பகுதியில் நான்கு இடங்களில் கொள்ளையடித்து விட்டு, உடனடியாக ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கசந்தர் என்னும் இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு ஒவ் வொரு அமாவாசை அன்றும் நடக்கும் திருடர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இருந்துள்ள னர். அந்தக் கூட்டத்தில் அவர் கள் தவறாமல் கலந்துகொண்டு வந்ததை போலிசார் விசா ரணையில் தெரிந்துகொண்டனர். 

கைது செய்யப்பட்ட அரவி என்ற அரவிந்தன், ஓசை மணி இருவரையும் காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

படம்: தமிழக ஊடகம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon