குடிநீர் தட்டுப்பாடு; நகராட்சி முற்றுகை

குடிநீர் தட்டுப்பாடு; நகராட்சி முற்றுகை

1 mins read

தூத்துக்குடி: குடிநீர் இன்றி எந்த ஒரு காரியமும் நடக்காது. தூத்துக்குடி அருகே உள்ள சத்தியா நகர் பகுதியில் கடுமையாக நிலவி வரும் இந்த தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி மாநகராட்சியை மக்கள் முற்றுகையிட்டனர். குடிப்பதற்குத் தண்ணீர் குடம் ஒன்றுக்கு 5 ரூபாயில் இருந்து 10 ரூபாய் வரையில் வாங்கிக் குடிக்கும் சூழ்நிலை உருவாகி வருவதாக குற்றம் சாட்டிய மக்கள், மாநகராட்சியை முற்றுகையிட்டனர்.

தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தங்கள் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் இல்லையெனில் சாலை மறியலில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.