3,846 கி.மீ. சைக்கிள் பயண சாதனை

3,846 கி.மீ. சைக்கிள் பயண சாதனை

1 mins read
b8e4e415-353b-4e9d-9e6b-442912deeaca
-

வேலூர்: மனித நேயத்தை வலியுறுத்தி 3,846 கி.மீ. சைக்கிள் பயணம் மேற்கொண்ட வேலூர் இளைஞர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். வேலூர் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் நரேஷ் குமார் ராஜேந்திரன் (படம்). 26 வயதாகும் இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து விட்டு பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் மனித நேயம், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். மொத்தம் 3,846 கிலோமீட்டர் தொலைவில் சீனா, பூடான், நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய ஐந்து நாடுகளின் எல்லைகளைக் கடந்துள்ளார்.