இருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிய போலிஸ்காரர் கைது

இருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிய போலிஸ்காரர் கைது

2 mins read
5add390f-c9bb-4072-abbd-f4c655e46d13
-

நாகை: பெட்டிக் கடை வைத்திருந்த பெண்ணிடம் தொடர்ந்து பொழு துக்கும் கதை பேசிக்கொண்டிருந்த போலிஸ்காரர் ஒருவரைக் கண் டித்த நாகை பகுதி மக்கள் இரு வரை ஆத்திரம் அடைந்த போலிஸ் காரர் துப்பாக்கியால் சுட்டார். பின் னர் அங்கிருந்து தப்பியோடி ஓரி டத்தில் பதுங்கியிருந்த காவலர் ஜெத்தன் ராஜைக் காவல்துறை யினர் கைது செய்தனர்.

நாகை மாவட்டம், குத்தாலம் அருகே திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது. இங்கு குருமகா சன்னி தானமாக உள்ள அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் பாதுகாவலராக ஆயுதப்படை காவல்துறை காரர் ஜெத்தன் ராஜ், 30, என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், திருவாவடுதுறை கடை வீதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் ஒரு பெண்ணின் கடைக்குச் சென்று அந்தப் பெண்ணிடம் கடந்த சில நாட்களாக தகாத முறையில் பேசிவந்துள்ளார்.

வழக்கம்போல நேற்று முன் தினமும் இரவு 11 மணி அளவில் அந்தக் கடைக்குச் சென்ற ஜெத்தன் ராஜ் அந்தப் பெண்ணிடம் தகாதமுறையில் பேசியுள்ளார்.

அதைப்பார்த்த மதியழகன், 46, என்பவர், அந்தப் பெண்ணிடம் ஜெத்தன் ராஜ் பேசுவதைத் தனது கைபேசியில் படம்பிடித்துள்ளார்.

உடனே போலிஸ்காரர் ஜெத் தன் ராஜ், மதியழகனின் கை பேசியை பறித்துக்கொண்டு அவரை அங்கிருந்து செல்லுமாறு விரட்டினார்.

மதியழகன் தனது கைபேசியை திருப்பித்தருமாறு கேட்டதற்கு ஜெத்தன் ராஜ் தர மறுத்துவிட்டார்.

ஆனாலும் மதியழகன் தொடர்ந்து தனது கைபேசியை தரும்படி கேட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த போலிஸ்காரர் ஜெத்தன்ராஜ், ஆதீனத்தின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியால் மதி யழகனின் காலில் சுட்டார்.

அதைப்பார்த்த அந்தக் கிராம நாட்டாண்மை செல்வராஜ், 40, ஜெத்தன் ராஜிடம் தட்டிக் கேட்டார். அப்போது மேலும் ஆத்திரம் அடைந்த ஜெத்தன் ராஜ், நாட் டாண்மை செல்வராஜ் காலிலும் துப்பாக்கியால் சுட்டார்.

அப்போது அங்கு வந்த மதி வாணன், 54, என்பவரையும் ஜெத் தன் ராஜ் தாக்கினார்.

துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு அந்தப் பகுதிக்குக் கிராம மக்கள் திரண்டு வந்தனர். அவர் கள் ஜெத்தன்ராஜை சுற்றி வளைத் துப் பிடிக்க முயன்றனர். ஆனால் ஜெத்தன்ராஜ் வானத்தை நோக்கி ஒருமுறை துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

அங்கு திரண்ட மக்கள், ஜெத்தன் ராஜின் வாகனத்தைத் தீவைத்துக் கொளுத்தினர்.

துப்பாக்கிச் சூட்டில் காய மடைந்த வி.மதியழகன், ச.செல்வ ராஜ் ஆகிய இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் சிகிச்சை அளிக்கப் படுகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.