சென்னை: சென்னையில் வரலாறு காணாத அளவில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு வசிக்கும் மக்கள் குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.
தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள சென்னைவாசி கள் கூறியபோது, "சென்னையில் கடந்த சில நாட்களாக வீட்டில் ஒருவருக்கு ஒரு வாளி என்ற கணக்கில்தான் தண்ணீரை உப யோகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
"தண்ணீர் லாரிகளும் முறை யாக குடிநீர் விநியோகம் செய்ய வில்லை. ஒப்பந்த முறையில் தண் ணீர் லாரிகள் இயக்கப்படுவதால் அதிக லாபம் பெறும் நோக்கத் துடனே ஒப்பந்ததாரர்கள் செயல் படுகின்றனர்.
"சென்னையில் அதிக அளவில் தண்ணீரைப் பயன்படுத்தும் நட் சத்திர ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், அடுக்குமாடி குடி யிருப்புகளுக்கு ஒப்பந்த விலையை விடவும் அதிக லாபத்தில் சென்னை குடிநீர் வாரியத்தில் இருந்து பெறப்பட்ட தண்ணீரை வழங்கி வருகின்றனர்.
"குடிநீர் வாரியத்தில் எந்த ஒரு முன்பதிவுமின்றி இவர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் குடிநீரை வழங்கி வருகின்றனர்.
"இதனால் அதிக பணம் கொடுப்பவர்களுக்கே முன்னுரிமை அளித்து குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. சாதாரண மக்களுக்குக் கிடைக்க வேண்டிய குடிநீர் முறையாக வந்து சேர்வதில்லை.
"அவசரமாக தண்ணீர் தேவைப் படுபவர்கள் 1,000 ரூபாயை வெட்டினால் போதும். கேட்டதும் தண்ணீர் வந்துவிடுகிறது.
"குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட் டுள்ள இந்த நேரத்தில் அரசு அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களின் இந்தப் போக்கைக் கண்டித்து முறையாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்," என்று அவர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னைக்கு நீர் வழங்கிவரும் ஏரிகளான புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், வீராணம் ஆகியவை குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதில் வீராணம் ஏரியைத் தவிர மற்ற ஏரிகளில் நீரின் அளவு அதிகளவில் வற்றிவிட்ட தால் சென்னைவாசிகளில் பெரும் பாலானோர் லாரி தண்ணீரை நம் பியே வாழ்க்கை நடத்துகின்றனர்.
சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் தண்ணீர் லாரியில் குடிநீர் பெற இணையம் அல்லது கைபேசி மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது. அவ்வாறு முன்பதிவு செய்தபின் னரும் இரு வாரங்கள் கழித்துத் தான் குடிநீர் வழங்கப்படுவதாக சென்னைவாசிகள் குற்றம் சுமத்தி உள்ளனர்.

