மின்சாரம் நின்றது, மூச்சுத் திணறியது, ஐந்து பேர் பலி என புகார்

மின்சாரம் நின்றது, மூச்சுத் திணறியது, ஐந்து பேர் பலி என புகார்

1 mins read

மதுரை: மதுரையில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் செவ்வாய்க்கிழமை பல பகுதி களிலும் மின்சாரம் தடைபட்டது. அரசாங்க மருத்துவமனையும் மின் சாரத்தைப் பெற முடியவில்லை.

இதனால் அவசர சிகிச்சை பிரிவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஐந்து நோயாளிகள் ஐந்தே நிமிடங் களில் உயிரிழந்துவிட்டதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

ஆனால் அந்தப் புகார்களை மருத்துவமனை மறுத்துவிட்டது.

மதுரையில் உள்ள ராஜாஜி அர சினர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் பலர் சேர்க் கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

திடீரென்று மின்சாரம் தடை பட்டதால் காற்றோட்ட சாதனங்கள் நின்றுவிட்டன. இதனால் நோயாளி கள் சுவாசிக்க போதிய ஆக்சிஜன் இல்லாமல் போய்விட்டது. ஐந்து பேர் மூச்சுவிட முடியாமல் அடுத் தடுத்து மாண்டுவிட்டார்கள் என்று உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்தினர் மருத்துவமனை யில் கூடி போராடினர்.

ஆனால் மின்சாரம் போனதுமே பேட்டரி மூலம் உடனடியாக காற் றோட்டச் சாதனங்களைத் தாங்கள் செயல்பட வைத்துவிட்டதாகவும் சுவாசக் கருவிகள் இயங்காமல் போனதால் யாருமே உயிரிழக்க வில்லை என்றும் மருத்துவமனை விளக்கியது.