சென்னை: அட்சய திருதியை திருநாளை முன்னிட்டு செவ்வாய்க் கிழமை தமிழகத்தில் சென்ற ஆண்டைவிட 30% அதிக தங்க விற்பனை நடந்ததாக தெரிவிக் கப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.31,730க்கு விற்கப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
அட்சய திருதியை நாளில் நகை வாங்கினால் அவை பன் மடங்காகப் பெருகி வீடுகளில் தங்கும் என்று இந்துக்களில் பல ரும் நம்புகிறார்கள். இதன் காரண மாக ஆண்டுதோறும் அட்சய திருதியையன்று புதிய நகை வாங்குவது வாடிக்கை.
மக்களின் இந்த மனநிலையை நன்கு பயன்படுத்திக்கொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் பல நகர்களிலும் செயல்படும் நகைக் கடைகள் ஏராளமான கவர்ச்சி திட்டங்களை அறிவித்து வாடிக் கையாளர்களைக் கவர்ந்தன.
கடைகள் அதிகாலை 6 மணி யிலிருந்தே அலங்கரிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டன.
ஏறக்குறைய எல்லா நகர்களி லுமே நகைக்கடைகளில் கூட்டத் தைப் பார்க்க முடிந்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
அட்சய திருதியை முன்னிட்டு பெரும் பெரும் நகரங்களில் நகைக் கடைகளுக்குப் பாதுகாப்புகளும் போடப்பட்டு இருந்தன.
மாநிலத்தில் மொத்தம் விற் பனையான தங்கத்தின் அளவு பற்றிய விவரங்கள் இன்னும் தெரியவில்லை.
இதனிடையே, வேலூர் மாவட் டத்தில் பல கடைகளில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகத் தகவல் வந்ததையடுத்து ஒரே நேரத்தில் திருப்பத்தூர், குடியாத்தம் ஆகிய நகர்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதனால் அந்தக் கடைகளில் அட்சய திருதியை வியாபாரம் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப் பட்டது. அந்த நகர்களில் பலரும் நகைகளை வாங்க இயலாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

