பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் புகார் வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
இதற்கான உத்தரவை ரத்து செய்யக் கோரி அவர்களின் தாய்மார்கள் மனு செய்தனர்.
அந்த மனுக்கள் தொடர்பில் தமிழக உள்துறைச் செயலாளர், கோவை மாவட்ட ஆட்சியர் இருவரும் பதில் அளிக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்கை அதற்கு உரிய சட்டத்தின் கீழ்தான் விசாரிக்கவேண்டும் என்று அந்தத் தாய்மார்கள் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

