சென்னை: கோவையைச் சேர்ந்த லாட்டரி மன்னன் மார்ட்டின் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பழனிசாமி என்ற ஊழியரின் உடலைப் பத்திரமாக வைத்துப் பாதுகாக்கவேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் அண்மையில் வரு மான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அந்த நிறுவனத்தின் காசாளர் பழனி சாமியிடமும் சோதனை நடந்தது.
இந்நிலையில், பழனிசாமி கடந்த 3ஆம் தேதி காரமடை அருகே வெள்ளியங்காடு குளத் தில் பிணமாக மிதந்தார்.
அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் சிபிஐ விசாரணை தேவை என்றும் அவரின் குடும்பத் தினர் கோரிக்கை விடுத்துவரு கிறார்கள்.
பழனிசாமியின் உடலை பரி சோதிக்கவேண்டும் என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.
இந்த மனு நேற்று விசார ணைக்கு வந்தது. இறந்துபோன பழனிசாமியின் உடல் இப்போது எங்கு இருக்கிறது என்று கேட்ட நீதிபதிகளுக்குப் பதில் அளித்த அரசு தரப்பு, அவரின் உடல் கோவை அரசு மருத்துவமனை யின் பிணவறையில் உள்ள தாகக் கூறியது.
மறு உத்தரவு வரும் வரை பழனிசாமியின் உடலைப் பதப் படுத்தி, பாதுகாப்பாக கோவை அரசு மருத்துவமனையில் வைத்திருக்கவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசா ரணையை வருகிற 15ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

