வெள்ளத்தில் சிக்கிய 35 பயணிகள் மீட்பு

வெள்ளத்தில் சிக்கிய 35 பயணிகள் மீட்பு

1 mins read

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. அதனால் நாட்றம் பள்ளி-திருப்பத்தூர் சாலையில் வேட்டப்பட்டு கூட்ரோடு அருகே ரயில்வே பாலத்தின் கீழ் அளவுக்கு அதிக மான தண்ணீர் தேங்கியது. அப்போது திருப்பத்தூரிலிருந்து நாட்றம்பள்ளி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து அந்தத் தண்ணீரில் சிக்கி பழுதாகி நின்றது.

பேருந்தைச் சுற்றி தண்ணீர் பெருமளவு தேங்கி இருந்ததால் அதில் இருந்த 35 பயணிகளும் கீழே இறங்க முடியாமல் தவித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் பயணிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் 'பொக்லைன்' இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி தண்ணீரை வெளியேற்றினர்.