கனிமொழி: அமைச்சர் ஆகக்கூட தகுதி இல்லாதவர் எடப்பாடி

கனிமொழி: அமைச்சர் ஆகக்கூட தகுதி இல்லாதவர் எடப்பாடி

1 mins read

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சவேரியார்புரத் தில் திமுகவின் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அமைச்சராகக்கூட இருக்கத் தகுதியில்லாத, கனவில்கூட நினைத்துப் பார்க்காத ஒருவரைத்தான் நாம் இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பெற்றுள்ளோம்," என சாடினார்.

தமிழ்நாடு விரைவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை முதலமைச்சராக்கும் என தெரிவித்த அவர், "தேர்தலில் தோற்றுவிடுவோம் என்கிற பயத்தினால்தான் அதிமுகவினர் தேர்தல் ஆணையத்தின் துணையுடன் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதிலிருந்து ஆளுங்கட்சியும் தேர்தல் ஆணையமும் கூட்டணி வைத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது," என்றார்.