பிரியாணி சாப்பிட்ட கர்ப்பிணி மரணம்

பிரியாணி சாப்பிட்ட கர்ப்பிணி மரணம்

1 mins read

வந்தவாசி: பிரியாணி சாப்பிட்ட ஏழு மாத கர்ப்பிணி இறந்த சம்பவம் அவரது உறவினர்களை அதிர்ச்சி அடைய வைத்த நிலையில் இதுகுறித்து வந்தவாசி காவல்துறையினர் விசா ரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த மேல்பாதிரியைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி, 40, விவசாயி. இவரின் மனைவி உமா, 30. இவர்களுக்கு 2 வயதில் ராகுல் என்ற மகன் உள்ளார்.

ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த உமா மட்டன் பிரியாணி கேட்க, விநாயகமூர்த்தி கடந்த 8ஆம் தேதி மதியம் வாங்கித் தந்தார். சாப்பிட்ட உமா மீதியை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டு இரவும் அதையே சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் மயக்கம் போட்டு விழுந்தவரை செங்கல் பட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இரவு இறந்தார்.