மின்வாரியத்தை முற்றுகையிட்ட மக்கள்

மின்வாரியத்தை முற்றுகையிட்ட மக்கள்

1 mins read

சென்னை: சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இப்போது புதிதாக நள்ளிரவு நேரத்தில் மின்சாரத் துண்டிப்பு பிரச்சினையும் அடிக்கடி தொடர்வ தாகக் கூறப்படுகிறது. வெளிச்சம், காற்று இல்லாமல் தூங்க முடியவில்லை என்று மக்கள் புலம்புகின்றனர். கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாகவும் இதுகுறித்து அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசினாலும் தக்க நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கூறி நள்ளிரவில் அண்ணாசாலையில் உள்ள மின் வாரிய அலுவலகம் முன்பு மக்கள் போராட்டம் நடத்தினர்.