'தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில்லை'

'தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில்லை'

1 mins read

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன், மதுரை மாவட்டம் பசுமலைப் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது அதிமுக அரசை கடுமையாக விமர்சித் தார். "தமிழகத்தில் தற்போது நடைபெறுவது ஜெயலலிதா ஆட்சி இல்லை. அதிமுகவுக்குத் தோல்வி பயம் வந்து விட்டதால்தான் மூன்று எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். எங்களுக்குத் துரோகம் செய்தவர்களுக்கு மே 23ல் பாடம் புகட்டப்படும்," என்றார்.