ஓபிஎஸ் கேரள ஆளுநராகும் வாய்ப்பு பிரகாசம் 

சென்னை: நாடாளுமன்றத் தேர் தலுக்குப் பின்னர் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (படம்) பாஜகவில் இணைகிறாரோ இல் லையோ, கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கேரள ஊடகங்கள் தக வல் வெளியிட்டுள்ளன.

தமிழகத்தில் இன்னும் 4 தொகுதிகளுக்கு தமிழக சட்ட மன்ற இடைத்தேர்தல் நடக்க உள் ளது. இந்த தேர்தல்தான் அதிமுக அரசின் தலைவிதியைத் தீர்மானிக் கப் போகிறது என்றும் அதிமுக ஆட்சி தொடர்வதும் கவிழ்வதும் இத்தேர்தலை பொறுத்தே உள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் வாரணாசியில் பெரிய பிரசாரப் பேரணியை பிரதமர் மோடி நடத் தியபோது, இதில் ஓ.பன்னீர் செல் வம் கலந்துகொண்டார். உடனே அவர் பாஜகவில் இணையப் போவதாகக் கூறப்பட்டது.

தொடர்ந்து இதுகுறித்து விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்ட பன்னீர்செல்வம், "நான் அதிமுக தொண்டன். நான் எப்போதும் அதிமுக தொண்ட னாகவே இருப்பேன். கடைசி மூச்சுவரை அதிமுகவில் இருப் பேன். நான் பாஜகவில் சேர்வதாக வெளியான செய்திகள் எல்லாம் வதந்தி," என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் இதுகுறித்து பேட்டி அளித்த அமமுக செய்தித் தொடர்பாளர் தங்கத் தமிழ்ச் செல் வன், "ஓ.பன்னீர்செல்வம் பாஜக வில் இணையப் போவது உறுதி.

"அவரது அறிக்கை பொய் யானது. அவர் ஆளுநர் பதவிக்கு ஆசைப் படுகிறார். அதிமுக ஆட்சி மாறும் சூழலில் அவர் ஆளுநர் பதவி வகிக்கச் சென்றுவிடுவார்," என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் கேரள மாநில ஆளுநராக நியமிக் கப்பட வாய்ப்புள்ளதாக கேரள ஊடகச் செய்திகள் தெரிவிக்கின் றன.

கேரள ஆளுநராக இருக்கும் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் பதவிக்காலம் முடிந்தபின் ஓ.பி.எஸ் ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப் புள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி கேரளாவின் தற் போதைய ஆளுநர் தமிழர். அடுத்த ஆளுநரும் தமிழராக இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல் ஓ.பன் னீர்செல்வம் பாஜகவிற்கு நெருக்கமானவர். இவர் வட மாநிலங்களில் ஆளுநராக நிய மிக்கப்பட வாய்ப்பில்லை.

ஆந்திரா, கர்நாடகா செல்ல வும் வாய்ப்பில்லை. அதனால் அவர் கேரள ஆளுநராக நிய மிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

ஆனால் ஓ.பி.எஸ் இப்போது தான் அரசியலில் உச்சத்தில் இருக்கிறார். அவர் ஆளுநரானால் அரசியல் வாழ்க்கை நிறைவு பெறும். அதனால் இப்போது அவர் அந்தப் பதவிக்கு ஆசைப்பட மாட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!