ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

1 mins read

மதுரை: மதுரை அருகே ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே இரு ரயில்கள் வந்துகொண்டி ருந்த நிலையில், இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து நேர இருந்த நிலையில் நல்ல வேளையாக இந்த பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் உயிர் தப்பிய பயணிகள் பலரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

மதுரையில் இருந்து செங் கோட்டை நோக்கிப் புறப்பட்ட ரயில் தாமதமாக திருமங்கலம் ரயில் நிலையம் வந்தடைந்தது. இதனால், அந்த ரயில் அங் கிருந்து உடனடியாக புறப்பட சிக்னல் கொடுக்கப்பட்டது. அதேசமயம், செங்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி அதே தண்டவாளத்தில் மற்றொரு ரயில் வந்துகொண்டிருந்தது.

ஒருவழிப்பாதை என்பதால் செங்கோட்டை செல்லவேண்டிய ரயில் திருமங்கலத்திலேயே நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ரயில் புறப்பட சிக்னல் கொடுக்கப்பட்டதால் இரு ரயில் களும் மோதும் நிலை வந்தது.

இதைத்தொடர்ந்து வாக்கி டாக்கி மூலம் இரு ரயில்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படுவது தவிர்க்கப் பட்டது. பின்னர் செங்கோட்டை சென்ற ரயில் மீண்டும் திருமங்கலம் நோக்கி வந்தது.