கொடைக்கானல் ஏரியில் மனைவியுடன் மு.க.ஸ்டாலின் படகு சவாரி

கொடைக்கானல் ஏரியில் மனைவியுடன் மு.க.ஸ்டாலின் படகு சவாரி

1 mins read
1333b7b0-950c-40ca-84de-d47acc225fd2
-

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் மு.க.ஸ்டாலின் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலினுடன் சேர்ந்து படகு சவாரி செய்தார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அங்கு பிரசாரத்தை முடித்துக் கொண்டு மு.க.ஸ்டாலின் ஓய்வு எடுப்பதற்காக

நேற்று முன்தினம் இரவு கொடைக்கானல் வந்தார். காலையில் கோல்ப் மைதானத்தில் நடைப்பயிற்சி செய்தார். தொடர்ந்து கொடைக்கானல் ஏரியில் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, எம்எல்ஏ செந்தில்குமார், அவரது மனைவி ஆகியோர் படகு சவாரி செய்தனர். நட்சத்திர ஏரிப் பகுதியில் மு.க.ஸ்டாலினுடன் திமுகவினரும் சுற்றுலாப் பயணிகளும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இரு நாட்கள் ஓய்வுக்குப் பிறகு அவர் நேற்று மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்பட்டது.

படம்: ஊடகம்