சுடச் சுடச் செய்திகள்

எழுவரை விடுதலை செய்ய ஆளுநர் விரைந்து முடிவெடுக்க தலைவர்கள் வலியுறுத்து

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்ற வாளிகள் எழுவரையும் விடுதலை செய்வதில் ஆளுநர் பன்வாரிலால்  புரோகித் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று பல அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி உள்ளனர். 

ஆனால், இந்தக் குற்றவாளி களை கருணை அடிப்படையில் விடுதலை செய்வது ஏற்புடையதல்ல என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரி வித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண் டனை பெற்ற பேரறிவாளன், நளினி உள்ளிட்ட எழுவரையும் விடுவிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நேற்று முன்தினம் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநரே முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளது.

இதையடுத்து எழுவரையும் இனியும் தாமதிக்காமல் விடுதலை செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவன ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

இந்நிலையில், சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், “கருணை அடிப் படையில் எழுவரையும் விடுதலை செய்வது எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணமாகிவிடும். இது தான் காங்கிரஸ் கட்சியின் கருத்து. அதனால் கொலையில் ஈடுபட்டவர்கள் மீது கருணை காட்டுவது ஏற்புடையதல்ல என் பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப் பாடு,” என தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

இந்நிலையில், எழுவரின் விடு தலை குறித்து ஆளுநர் முடிவெ டுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஒரு ஆலோசனையை மட்டுமே வழங்கியுள்ளது. இம்முடிவை ஏற் பதும் மறுப்பதும் ஆளுநரைப் பொறுத்தது.  

ராஜீவ்காந்தி கொலையாளி களை மன்னித்துவிட்டோம் எனக் காங்கிரஸ் தலைமை ஏற்கெனவே சொல்லிவிட்டது.

இந்தக் கொலை வழக்கில் சட்டம் தன் கடமையை செய்யட்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. 

25 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வளவோ தமிழர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களையும் விடுதலை செய்யட்டும். எழுவரை யும் விடுதலை செய்யட்டும். ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் நீதிமன்றத்திற்கோ அல்லது ஆளுநருக்கோ அழுத்தம் தரக்கூடாது. நீதியைச் சிறு, சிறு குழுக்கள் முடிவு செய்யக்கூடாது,” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியபோது, “எழுவரின்  விடு தலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றமே தள்ளு படி செய்திருப்பது அவர்களின் எதிர்கால வாழ்வில் நம்பிக்கை ஒளிக்கீற்றை தோற்று வித்திருக் கிறது. ஆளுநருக்கு இனி எந்தத் தடையும் இல்லை,” என்றார். 

டாக்டர் ராமதாஸ் கூறியபோது, “ஆளுநர்  இனியும் தாமதிப்பது முறையல்ல. விதிகளைக் கடைப் பிடிப்பதற்குப் பதிலாக கருணை யைக் கடைப்பிடித்துச் சிறையில் உள்ள எழுவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும். ஆளு நர் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் அவர்கள் தங்களின் ஒருநாள் வாழ்க்கையை இழந்துகொண்டி ருப்பதால் விரைவாக அவர்கள் விடுதலைக் காற்றை சுவாசிக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon