விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்திக் கொன்றது ஏன் என்பது குறித்துக் கைதான வாலிபர் போலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார். "என் காதலியுட னான பழைய நட்பு முன்புபோல் இல்லாமல் கசந்து போனதால் அவரைக் கொன்றுவிட்டேன்," என்று அவர் கூறியுள்ளார்.
விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்த வர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி கொளஞ்சி. இவர்களது மகள் திலகவதி, 19. இவர் விருத்தாசலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2ஆம் ஆண்டு படித்து வந்தார்.
பேரளையூர் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் 19 வயது ஆகாஷ் என்ற இளையரால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
போலிசில் ஆகாஷ் அளித்த வாக்குமூலத்தில், "பள்ளிக் கூடத்தில் படிக்கும்போது எனக் கும் திலகவதிக்கும் பழக்கம் ஏற் பட்டது. தற்போது நான் கூலி வேலை செய்து வருகிறேன். திலக வதி கல்லூரியில் படித்து வந்தார்.
"நாங்கள் இருவரும் அடிக்கடி கைபேசியில் பேசி நட்பை வளர்த்து வந்தோம். கடந்த சில நாட்களாக திலகவதி என்னுடன் பழைய மாதிரி பேசுவதில்லை.
"எனவே அவரிடம் பேசு வதற்காக பலமுறை முயன்றேன். ஆனால் முடியவில்லை.
"திலகவதி நேற்று முன்தினம் கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வந்தபோது அவரைப் பின்தொடர்ந்து நானும் சென்றேன். அவரது வீட்டில் யாரும் இல்லை.
"எனவே வீட்டிற்குள் புகுந்து திலகவதியிடம் பேசிக்கொண் டிருந்தேன். பழைய நட்பு கசந்து போனது போல், என்னுடன் பேச பிடிக்காதது போல் என்னை எடுத்தெறிந்து பேசினார்.
"அந்த சமயத்தில் எனக்கும் திலகவதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திர மடைந்த நான் மறைத்து வைத் திருந்த கத்தியை எடுத்துத் திலக வதியின் வயிற்றில் குத்தினேன்.
"உடனே அவர் கீழே விழ, அங்கிருந்து வீட்டிற்கு தப்பி ஓடி னேன். வெளியூர் செல்வதற்காக பேருந்திற்காக காத்திருந்தபோது என்னைப் போலிசார் கைது செய்து விட்டனர்," என்றார் ஆகாஷ்.
இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

