தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்: அரசாணை வெளியீடு

1 mins read

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, வாக்குச்சாவடிகள் அமைப்பது உள்ளிட்டவற்றுக்கான வழிமுறை கள் குறித்து தமிழக அரசின் அரசாணை அரசிதழில் வெளி யிடப்பட்டுள்ளது.

இந்த அரசாணையை மாநிலத் தேர்தல் ஆணையத்திடமும் தமிழக அரசு சமர்ப்பித்துள்ளது.

அதில், மாவட்டம், ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி, மாவட்டம் வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்க வலியுறுத்தப் பட்டுள்ளது.

இதேபோல வாக்குச்சாவடிகள் அமைக்கும்போது வாக்குச்சாவடி எண், வாக்குச்சாவடியின் பெயர், வாக்குச்சாவடியின் வகை ஆகிய அனைத்தையும் குறிப்பிடுவதைக் கருத்தில் கொள்ளுமாறும் கூறப் பட்டுள்ளது.

தமிழகத்தில் 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர் தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் களின் பதவிக்காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் தேதி முடிவடைந்தது. 2016ஆம் ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், கடந்த மூன்று ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகள் இயங்கி வருகின்றன.

உள்ளாட்சித் தேர்தலுக்கான தொகுதி சீரமைப்புப் பணிகளைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலை சரிசெய்யும் பணியை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண் டிருந்தது.

அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கில் பதிலளித்த மாநிலத் தேர்தல் ஆணையம், தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வாக்காளர் பட்டியலை சரிசெய்யும் பணி நடப்பதாகக் கூறி மூன்று மாத அவகாசம் தருமாறு கோரியது.