சென்னை: சென்னை மாநகர போக்கு வரத்து நெருக்கடியை குறைப்பதற் காக மெட்ரோ ரயில் திட்டம் உரு வாக்கப்பட்டது.
முதற்கட்டமாக கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோயம்பேடு-ஆலந்தூர் வரை உயர்மட்டப் பாதை யில் மெட்ரோ ரயில் சேவை தொடங் கப்பட்டது.
அதைத் தொடர்ந்து திருமங்கலம்-சென்ட்ரல்-வண்ணாரப்பேட்டை, சென்ட்ரல்-சைதாப்பேட்டை வரை சுரங்கப்பாதையிலும் சின்னமலை-விமான நிலையம் வரை உயர்மட்டப் பாதையிலும் மெட்ரோ ரயில் பயணி கள் சேவை நடந்து வருகிறது.
ஏப்ரல் முதல் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மே மாதத் தொடக்கத்தில் இருந்து தினமும் 1 லட்சம் பேர் பயணம் செய்து வரு வதாக அதிகாரிகள் கூறினர்.

