மதுரையிலிருந்து ‌ஷீரடிக்கு சிறப்பு ரயில்

மதுரையிலிருந்து ‌ஷீரடிக்கு சிறப்பு ரயில்

1 mins read

மதுரை: ‌ஷீரடி, பண்டரிபுரம், மந்த்ராலயம் ஆகிய ஆன்மீகத் தலங்களுக்குச் செல்ல சிறப்பு ரயிலை ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்துள்ளது. இந்த ரயில் ஜூன் 3ஆம் தேதி மதுரையில் இருந்து புறப்படும். இந்திய ரயில்வேயும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமும் (ஐஆர்சிடிசி) பாரத தரிசன சுற்றுலா திட்டத்தை கடந்த 2005 முதல் தொடங்கி நடத்தி வருகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் 350க்கும் அதிகமான சுற்றுலாக்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் ஆன்மீக தலங்களுக்குச் சென்றுள்ளனர்.

இதையொட்டி ‌ஷீரடி, பண்டரிபுரம், மந்த்ராலயம் ஆகிய தலங்களுக்குச் செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.