சாதனை: நவீன வாகன இயந்திரம்

சாதனை: நவீன வாகன இயந்திரம்

1 mins read

தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த இயந்திரவியல் பொறியாளர் சௌந்தரராஜன் குமாரசாமி(படத்தில் வலம்), சுற்றுச்சூழலைப் பாதிக்காத நீரில் இயங்கும் வாகன இயந்திரத்தை கண்டுபிடித்து சாதனைப் படைத்துள்ளார். இவர் கண்டுபிடித்த இயந்திரம், ஹைட்ரஜன் எரிபொருளை பயன்படுத்தி காற்றுக்கு மாசில்லாத ஆக்ஸிசிஜனை வெளியிடுகிறது.

இதனை வடிவமைக்க பத்து ஆண்டுகள் ஆனதாக பொறியாளர் குமாரசாமி கூறியுள்ளார். உலகிலேயே இத்தகைய கண்டுபிடிப்பு இதுவே முதல் முறை என்று அவர் கூறியுள்ளார். "புதிய வகை இயந்திரம் ஜப்பான் நாட்டு வாகனங்களில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்தியாவிலும் இந்த இயந்திரத்தை விரைவில் அறிமுகப்படுத்துவேன்," என்று அவர் கூறினார்.