பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்து காணொளிளை எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தை உலுக்கியிருக்கிறது. இந்த விவ காரம் தொடர்பில் நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு, பொறி யாளர் சபரிராஜன், சதிஷ், வசந்த குமார், மணிவண்ணன் ஆகிய ஐவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குச் சென்று ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளி நோயாளிகள், உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றவர்களின் பெயர் பட்டியலைப் பெற்றுச்சென்றனர்.
மேலும் பொள்ளாச்சி உதவி ஆட்சியர் அலுவலகம், பொள் ளாச்சி தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களுக்கும் அவர்கள் சென்றனர்.
ஆனால் அங்கு எதற்கு சென்றார்கள் என்பது குறித்து விவரம் தெரிவிக்கப்படவில்லை.
பொள்ளாச்சி எம்ஜிஆர் நகரில் உள்ள சபரிராஜன் வீட்டுக்கும் சிபிஐ அதிகாரிகள் சென்றனர். சபரிராஜன் பெற்றோரிடம் அவர்கள் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின்போது சிபிஐ அதிகாரிகளிடம் அவர்கள் சில தகவல்கள் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
மாக்கினாம்பட்டியில் உள்ள திருநாவுக்கரசு வீட்டிற்கும் சிபிஐ அதிகாரிகள் செல்லலாம் என்ற தகவல் பரவியது.
ஆனால் இரவு 10 மணி வரை சிபிஐ அதிகாரிகள் அங்கு செல்லவில்லை. இந்த நிலையில் மாக்கினாம் பட்டி மற்றும் அதே பகுதி ஜோதி நகரில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பலரிடம் சிபிஐ அதிகாரிகள் முகவரிகளை பெற்று சென்றுள் ளனர்.
இந்த வழக்கை முதலில் பொள்ளாச்சி கிழக்கு போலிசார் விசாரித்து வந்தனர்.
பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு அதன் பிறகு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

