ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற் பனை செய்யப்பட்டதாகக் கூறப் படும் வழக்கு விசாரணையில் 24 சிறுமிகள் உள்பட முப்பது குழந்தைகள் விற்கப்பட்டுள்ளதை சிபிசிஐடி அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.
காவல்துறையினர் விசார ணை விவரங்களை நேற்று முன் தினம் வெளியிட்டனர்.
ராசிபுரம் வட்டம், காட்டூர் காட்டுக்கொட்டாய் வள்ளியம் மாள் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா என்று அழைக்கப்படும் அமுதவள்ளி, பெற்றோரிடமிருந்து குழந்தை களைச் சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதன் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி வெளியான காணொளி அதி வேகத்தில் பரவி காவல்துறையின் கவனத்தையும் ஈர்த்தது.
விசாரணையில் கொல்லி மலைப் பகுதியில் வறுமையில் இருக்கும் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளை, குழந்தை இல்லாத தம்பதி களுக்குச் சட்டவிரோதமாக லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு ஒரு கும்பல் விற்று வருவது தெரியவந்தது.
இது தொடர்பில் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை பவர்காடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அவசர வாகன ஓட்டுநர் முரு கேசன், தரகர்களாக செயல்பட்ட ஈரோட்டைச் சேர்ந்த பர்வீன், அருள்சாமி, ஹசீனா, லீலா, பவானியைச் சேர்ந்த செல்வி உள்பட எட்டுப் பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம், நாமக்கல், ஈரோடு மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் இக்கும்பல் குழந்தை விற் பனையில் ஈடுபட்டது கண்ட றியப்பட்டது.
இதற்கிடையே இந்த வழக்கு சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது.
சிறையில் அடைக்கப்பட்டு உள்ளவர்களிடம் நடத்திய விசார ணையில் 24 பெண் குழந்தைகள், 6 ஆண் குழந்தைகள் என மொத்தம் 30 குழந்தைகளை பணத்துக்காக விற்றிருப்பது விசாரணையில் தெரிய வந்துள் ளது.
இந்தக் குழந்தைகளின் பெற் றோர் யார், இந்தக் குழந்தைகளை வாங்கி இப்போது வளர்த்து வரும் பெற்றோர் யார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் வழக்கின் மற்றொரு முக்கிய எதிரியான சாந்தி என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

