திருப்பூர்: திருப்பூரில் பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் ஒருவர் பிணமாகக் கிடந்ததால் சுற்று வட்டார மக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
வெளியூரில் இருந்து வரும் தொழிலாளர்கள் தங்கி வேலை செய்யும் வசதிக்காக பனியன் தொழிற்சாலை உரிமையாளர் ஒருவர் திரு முருகன்பூண்டி நெசவாளர் காலனியில் உள்ள தோட்டத்தில் பத்து வீடுகளைக் கட்டித் தந்துள் ளார். இந்த நிலையில் பூட்டியிருந்த 4வது வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது.
இதனால் அக்கம்பக்கத்தினர் சன்னல் வழியே எட்டிப்பார்த்தனர். அப்போது அங்கு அழுகிய நிலையில் இளம்பெண் உடல் கிடந்தது.
இதையடுத்து திருமுருகன் பூண்டி காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் பிணமாகக் கிடந்தவர் புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி ஆவுடையப்பன் கோயில் பகுதியைச் சேர்ந்த கயல்விழி (வயது 21) என்பது தெரியவந்தது.
இவரும் அதே பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்த 22 வயது விக்னேஷும் காதலித்து மூன்று மாதங்களுக்கு முன்பு தங்களது வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டனர்.
இந்த நிலையில் கயல்விழி பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
கயல்விழி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப் பட்டாரா என்பது தெரியவில்லை.
கணவர் விக்னேஷை காண வில்லை என்றும் கூறப்படுகிறது.
அவரது ஊர் விவரம் தெரியாத தால் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

