நல்லகண்ணுவுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய கோரிக்கை

நல்லகண்ணுவுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய கோரிக்கை

1 mins read
2f1f8a0e-50cb-4324-869b-ad56982eb064
-

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்குத் தமிழக அரசு உடனடியாக ஒரு வீடு ஒதுக்கவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக தியாகராய நகரில் உள்ள அரசுக் குடியிருப்பில் வசித்து வந்தார் நல்லகண்ணு.

இந்நிலையில் அந்தக் குடியிருப்பு உள்ள இடத்தில் புதிய கட்டடம் அமைக்கப்பட உள்ளது. இதனால் அங்கு வாடகைக்குக் குடியிருப்பவர்களை வேறிடத்துக்கு இடம் பெயருமாறு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து நல்லகண்ணு அரசு குடியிருப்பு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதையடுத்து அவருக்கு அரசு சார்பில் வீடு ஒதுக்கீடு செய்யவேண்டும் என பலரும் வலியுறுத்தி உள்ளனர்.