கன்னியாகுமரியில் இளம்பெண்கள் மாயமாவதால் மக்கள் அச்சம்

கன்னியாகுமரியில் இளம்பெண்கள் மாயமாவதால் மக்கள் அச்சம்

1 mins read
6b0f6d11-feb1-4cf7-a3e2-14b3ae4ff095
படம்: காணொளியில் இருந்து எடுக்கப்பட்ட படம். -

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் இளம்பெண்கள் திடீரென மாயமாவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களில் மட்டும் 4 இளம்பெண்கள் உட்பட 6 பேர் மாயமாகி உள்ளனர். மேலும் சிலர் மாயமாகி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இதையடுத்து இந்தக் கடத்தலின் பின்னணி குறித்துப் போலிசார் தீவிர விசாரணை நடத்தவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கடத்தலில் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களிடம் போலிசார் விசாரணை நடத்த தயங்குவதாகவும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களைக் கண்டு போலிசார் அஞ்சக்கூடாது என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.