போலி கடப்பிதழ் தயாரிக்கும் கும்பலைச் சேர்ந்த 13 பேர் கைது

போலி கடப்பிதழ் தயாரிக்கும் கும்பலைச் சேர்ந்த 13 பேர் கைது

1 mins read
58a5a33e-8517-453e-ad38-8cf7c5c9c60c
கைப்பற்றப்பட்ட இந்திய போலி கடப்பிதழ்கள். படம்: கோப்புப் படம் -

சென்னை: போலி கடப்பிதழ் தயாரிக்கும் கும்பல் சென்னை போலிசாரிடம் சிக்கியது. அக்கும் பலைச் சேர்ந்தவர்களிடமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஏராளமான போலி கடப்பிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அண்மைக் காலமாகப் போலி கடப்பிதழ் உதவியோடு வெளி நாடு செல்ல முயன்ற பலர் சென்னை விமானநிலையத்தில் பிடிபடுகின்றனர். அவர்களிடம் போலிசார் நடத்திய தீவிர விசா ரணையின்போது திருச்சியைச் சேர்ந்த கலையரசி என்பவர் போலி கடப்பிதழ் தயாரிக்கும் கும்ப லுக்கு மூளையாகச் செயல்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்துக் கலையரசியைப் பிடிக்க போலிசார் வியூகம் அமைத் தனர். தீவிர கண்காணிப்பின் மூலம் ராதாகிருஷ்ணன், கிருபா உள்ளிட்ட பலர் கலையரசிக்கு உதவிகரமாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இவர்கள் போலி கடப்பிதழ்களைக் கச்சிதமாகத் தயாரித்து ரூ.5 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை பெற்றுக்கொண்டு விற்பனை செய்துள்ளனர்.

இவர்களின் உதவியோடு ஏரா ளமானோர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். இதையடுத்து கலையரசி உள்ளிட்ட 13 பேரைத் தனிப்படை போலிசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து ஏராளமான போலி கடப்பிதழ்களும் போலி ஆவணங்களும் பறிமுதல் செய்யப் பட்டன.