சென்னை: திருநெல்வேலியைச் சேர்ந்த வி பால்ராஜ் என்பவர், 2017 ஜூலை 24ஆம் தேதி தான் திருப்பதியில் இருந்து சென்னைக்கு சப்தகிரி விரைவு ரயிலில் கூட்டத்தோடு கூட்டமாகச் சென்றதாகவும் இரண்டரை மணி நேரம் ரயில் வண்டியில் மின்சாரம் இல்லாமல் பெரும் சங்கடப்பட்டதாகவும் தெரிவித்து தனக்கு ரூ.3 லட்சம் இழப்பீடுவேண்டும் என்று கோரி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை மாவட்ட பயனீட்டாளர் நிவாரண அமைப்பு, அவருக்கு ரூ.10,000 இழப்பீடு கொடுக்கும்படி தென்னக ரயில்வேக்கு இப்போது உத்தரவிட்டுள்ளது.

