ஏரியில் படகுகள் மோதி சென்னை பெண் பலி

ஏரியில் படகுகள் மோதி சென்னை பெண் பலி

1 mins read

பழவேற்காடு: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள பழவேற்காடு ஏரியில் தடையை மீறி சவாரி சென்றபோது இரண்டு படகுகள் மோதிக்கொண்டன.

இதில் நிலைதடுமாறி நீரில் மூழ்கி சென்னை காசிமேட்டைச் சேர்ந்த மேரி, 40, என்ற பெண் உயிரிழந்தார்.

இதர ஒன்பது பேர் உயிர்தப்பினர். இந்தச் சம்பவம் ஞாயிறு மாலை நிகழ்ந்தது.