நல்லகண்ணு, கக்கன் குடும்பங்களுக்கு வீடுகள்

நல்லகண்ணு, கக்கன் குடும்பங்களுக்கு வீடுகள்

1 mins read

சென்னை: நல்லகண்ணு, கக்கன் குடும்பங்களுக்கு நல்ல முறை யில் உள்ள குடியிருப்பில் மாற்று வீடு ஒதுக்கப்படும்' என துணை முதல்வர் பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார்.

சென்னை தி. நகர் சிஐடி காலனியில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட தியாகியு மான நல்லகண்ணு வாடகைக்கு வசித்து வந்தார்.

அதே குடியிருப்பில் முன்னாள் அமைச்சர் கக்கன் குடும்பத்தின ரும் வசித்து வருகின்றனர்.

இப்போதைய குடியிருப்பை அகற்றிவிட்டு புதிய குடியிருப்பு கட்ட, வீட்டு வசதி வாரியம் திட்டமிட்டதால் நல்லகண்ணு வீட்டை காலி செய்து வெளியேறி விட்டார்.

மாற்று வீடு ஒதுக்காமல் அவ ரைக் காலி செய்ய உத்தரவிட்ட தற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.