வாகனத்தில் ஏற்றிச்செல்ல மறுத்ததால் குத்திக் கொலை; உறவினர்கள் மறியல், ஆர்ப்பாட்டம்

வாகனத்தில் ஏற்றிச்செல்ல மறுத்ததால் குத்திக் கொலை; உறவினர்கள் மறியல், ஆர்ப்பாட்டம்

1 mins read

அரக்கோணம்: வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே தட்சிணா மூர்த்தி, 32, என்பவரும் உறவினர் நாகராஜ், 23, என்பவரும் மோட்டார் சைக்கிளில் அன்வர்திகான்பேட்டைக்குச் சென்றனர்.

வழியில் வாகனத்தை நிறுத்தி விட்டு தட்சிணாமூர்த்தி தயிர் வாங்க கடைக்குச் சென்றார். நாக ராஜ் மோட்டார்சைக்கிள் அருகே நின்றுகொண்டிருந்தார்.

அப்போது இருவர் நாகராஜை அணுகி தங்களை மோட்டார்சைக் கிளில் அன்வர்திகான்பேட்டையில் விட்டுவிடும்படி கேட்டனர்.

அப்போது தட்சிணாமூர்த்தி கடைக்கு போய்விட்டு வாகனம் அருகே வந்தார். அந்த இருவரும் தட்சிணாமூர்த்தியிடம் பேச்சுக் கொடுத்து தகராறு செய்தனர். திடீரென்று தட்சிணாமூர்த்தியை அவர்கள் கத்தியால் குத்தினர்.

பின்னர் அந்த வழியாக வந்த வெங்கடேசன், 23, என்பவரைத் தாக்கிவிட்டு அவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளைப் பறித்துக் கொண்டு இருவரும் தப்பினர்.

தட்சிணாமூர்த்தி மருத்துவ மனைக்குக் கொண்டுசெல்லப்பட் டார். அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தச் செய்தி பரவியதை அடுத்து தட்சிணாமூர்த்தியின் உறவினர்கள், நண்பர்கள் சாலை யில் ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடு பட்டனர். போலிஸ் சமாதானம் செய்தது. தப்பிச்சென்ற கொலை யாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.