ஓட்டப்பிடாரம்: இடைத்தேர்தல் நடக்கும் ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காகப் போட்டியிடாமல் திமுகவை வெற்றிபெற வைப்பதற் காகவே அமமுக போட்டியிடுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனி சாமி தெரிவித்தார்.
அதிமுக சார்பில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் வேட் பாளருக்கு ஆதரவு திரட்டிய முதல்வர், "தினகரன் வெளியே அறிவிக்காமல் ரகசிய சூழ்ச்சி யுடன் செயல்பட்டு வருகிறார். திமுகவை வெற்றி பெற வைப்பது தான் அவருடைய நோக்கம்," என்று கூறினார்.
முதல்வருக்கு ஞாயிறன்று 65வது வயது பிறந்தநாள்.
அதைப் பெண்களுடன் சேர்ந்து பழனிசாமி கொண்டாடினார். அப் போது அவர், ஒரு பெண் குழந் தைக்கு ஜெயலலிதாவின் நினை வைக் குறிக்கும் வகையில் ஜெய லட்சுமி என்று பெயர் சூட்டினார்.
முதல்வரின் பிறந்தநாளை யொட்டி பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

