பொள்ளாச்சி போன 2 பெண்கள் கடத்தல்: உடல் தார் தரையில் உரசி ஒருவர் மரணம்

பொள்ளாச்சி போன 2 பெண்கள் கடத்தல்: உடல் தார் தரையில் உரசி ஒருவர் மரணம்

2 mins read

பொறையாறு: நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கடத்தல்காரர் களிடம் சிக்கி தார் சாலையில் தரதரவென இழுத்துச் செல்லப் பட்டு படுகாயம் அடைந்த கவியரசி என்ற 20 வயதுப் பெண் மருத்துவ மனையில் மாண்டார்.

தரங்கம்பாடி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளைக் கைதுசெய்யக் கோரி பல கிராமத்தினர் பொறை யாறு போலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பீதியைக் கிளப்பி உள்ளது.

முற்றுகைப் போராட்டம் கை விடப்பட்டுவிட்டது என்றாலும் இச் சம்பவம் தொடர்பான அதிர்ச்சியும் பரபரப்பும் கோபமும் அப்பகுதியில் இன்னமும் அடங்கவில்லை என்று கூறப்படுகிறது.

திருவெண்காட்டைச் சேர்ந்த அபிநயா, கேசவன்பாளையத்தைச் சேர்ந்த கவியரசி உட்பட நான்கு பெண்கள் பொள்ளாச்சிக்கு வேலைக்குப் போவதற்காக இம் மாதம் 6ஆம் தேதி இரவு 9 மணிக்குத் தரங்கம்பாடி பேருந்து நிலையம் நோக்கிச் சாலையில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக காரில் வந்த மர்ம நபர்கள் திடீரென காரின் வேகத்தைக் குறைத்து கவியரசியையும் அபிநயாவையும் காருக்குள் இழுத்துத் தள்ளினர்.

அபிநயா காரில் ஏற்றப்பட்டார் என்றாலும் அவர் காரிலிருந்து தப்பி தரையில் விழுந்துவிட்டார்.

கவியரசியின் புடவை காரில் மாட்டிக்கொண்டதால் அவர் சுமார் 500மீ. தூரம் தார் சாலையில் தர தரவென இழுத்துச்செல்லப்பட்டார்.

பொதுமக்கள் சத்தம் போட் டதை அடுத்து கவியரசியைத் தள்ளிவிட்டுவிட்டு மர்ம நபர்கள் தப்பிவிட்டனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கவியரசி, சனிக் கிழமை இரவு காலமானார்.

அபிநயா குணமடைந்து மருத் துவமனையிலிருந்து வீடு திரும்பி இருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பில் போலிசார் மெத்தனமாக இருப்பதாகக் கூறி பொறையாறு பகுதியில் போராட்டம் நடந்தது.