புதுக்கோட்டை: எத்தனை முறை சொல்லியும் எந்த ஒரு பயனும் இல்லாததால் இளையர்கள் தங் கள் சொந்த செலவிலேயே தாங் கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளை பரா மரிக்கத் தொடங்கி உள்ளனர்.
இளையர்களின் பொது நலன் கருதும் மனப்பாங்கு குறித்து பலரும் மனமாரப் பாராட்டி வரு கின்றனர்.
குளங்களைச் சீரமைக்க அதி காரிகளையும் அரசாங்கத்தை யும் எதிர்பார்த்திருந்தால் பருவ மழையும் பெய்து முடித்து விடும் என்பதால் இளைஞர்கள் உழைத்து தாங்கள் சம்பாதித்து வைத்துள்ள பணத்தில் குளம், ஏரி, ஓடை, வாய்க்கால்களைத் தூர்வாரும் பணியைத் தொடங்கி உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கொத்தமங் கலத்தில் இளைஞர்கள் சொந்த செலவில் நீர்நிலைகள், வாய்க் கால்களைத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆலங்குடி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
கொத்தமங்கலம், மறமடக்கி உள்ளிட்ட பகுதிகளில் 1,000 அடிக்கு மேல் ஆழ்குழாய் கிணறு அமைத்தும் நீரில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் நீர்நிலைகளைத் தூர்வாரி, பரா மரிப்புப் பணிகளை மேற்கொள்ள அரசுத்துறையினர் எந்த ஒரு நட வடிக்கைகளிலும் இறங்கவில்லை.
இதனால் இளைஞர்கள் ஒன்றி ணைந்து சொந்த செலவில் அணைக்கட்டு, கால்வாய்கள், குளங்களைத் தூர்வாரி, பரா மரிக்க முடிவுசெய்தனர்.
முதல்கட்டமாக, கொத்தமங் கலத்தில் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட அம்புலி ஆறு அணை, அதன் நீர்வரத்து கால்வாய்களைத் தூர்வாரி சீரமைக்கும் பணியைத் துவங்கி உள்ளனர்.
இளைஞர்கள் கூறியபோது, "அம்புலி ஆற்றில் தண்ணீர் இருந்த சமயத்தில் கிணற்றிலும் தண்ணீர் இருந்தது. அதைப் பயன் படுத்தி விவசாயமும் நடந்தது. மழை குறைந்ததால் கிணறுகளில் நீரில்லாமல் போனது. ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. நிலத்தடி நீரைச் சேமிக்கும் முயற் சியில் ஈடுபட்டுள்ளோம். இந்த ஆண்டு பருவமழை பெய்தால் கொத்தமங்கலத்தில் உள்ள அனைத்துக் குளங்களிலும் தண் ணீரைத் தேக்கிப் பாதுகாப்போம். கரையோரங்களில் மரக்கன்று நடுவதற்கும் திட்டமிட்டுள்ளோம்," என்று அவர்கள் கூறினர்.

