கோவை நடுச்சாலையில் அரிவாளால் இளையர்கள் வெட்டு

கோவை நடுச்சாலையில் அரிவாளால் இளையர்கள் வெட்டு

1 mins read
ec894f4b-0bc4-44e4-bacb-de3d5522c7f0
-

தமிழகத்தின் கோவை மாவட்டத்தின் நடுச்சாலையில் இரண்டு பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அங்குள்ள மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலிஸ் ஆணையாளர் அலுவலகத்திற்கு அருகில் ஏற்பட்ட இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் தப்பியோடியுள்ளனர்.

சிறையிலிருந்து நிபந்தனை பிணையில் வெளிவந்த 19 வயது பிரதீப், அவரது நண்பர் 19 வயது தமிழ்வாணனுடன் ஸ்கூட்டரில் நீதிமன்றத்திலிருந்து வெளியேறி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அவர்கள் தாக்கப்பட்டனர்.

படுகாயமடைந்த அவர்கள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உடனே சேர்க்கப்பட்டனர். சந்தேக நபர்களுக்கான தேடல் மும்முரமாகத் தொடர்கிறது.