சென்னை: திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரவணனை ஆதரித்து மதுரை விரகனூர், கோழிமேடு பகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
"மக்களுக்கு அளித்த உறுதிமொழியை காப்பாற்றுவது மட்டுமல்ல மக்களைப் பற்றி சிறிதும் சிந்திக்காதவர் பிரதமர் மோடி என்றும் தனது ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் மட்டுமே முதல்வர் கவனமாக உள்ளார் என்றும் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

