தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கமல்ஹாசன் பிரசாரத்திற்குத் தடை இல்லை

1 mins read
53a3894a-ba8c-4eb2-bf65-ad003b8b8341
-

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனின் பிரசாரத்திற்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை மறுத்துள்ளது. அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் பிரசாரம் செய்த கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி 'மகாத்மா' காந்தியைச் சுட்ட நாதுராம் கோட்சே ஓர் இந்து எனக் கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். மனம் புண்பட்ட பலர் கமல் பண்பட்ட முறையில் பேசியிருக்க முடியாதா என வினவினர்.

கமல்ஹாசனின் பேச்சு தொடர்பில் சில புகார்கள் தமிழக போலிசாரிடம் அளிக்கப்பட்டன. அத்துடன், கமல்ஹாசனின் பிரசாரத்திற்குத் தடை விதிக்கக் கோரும் மனு ஒன்று இந்திய உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதிகள் அதனை நிராகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. தேர்தல் பிரசார நடத்தை தொடர்பாக முடிவு கூறவேண்டியது தேர்தல் ஆணையமே என்று அந்நீதிபதிகள் கூறியுள்ளனர்.