"வீட்டுக்கு வாருங்களேன்"

"வீட்டுக்கு வாருங்களேன்"

1 mins read
a5875de6-6486-4bc0-af4d-602afe31779d
-

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைத் தமது வீட்டுக்கு அழைத்திருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அண்மையில் சந்திரசேகரராவ் ஸ்டாலினின் வீட்டுக்கு சென்றது அரசியல் வட்டாரங்களில் கவனத் தைக் கவர்ந்தது.ஸ்டாலின் எந்தப் பக்கத்திலும் நிலையாக இருப்பதில்லை என்று தமிழகத்தின் பாஜக தலைவர் தமிழிசை குறைகூறினார்.

பாஜகவுடனும் ஸ்டாலின் பேசி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் முன்பு கூறியிருந்தது உண்மை என தமிழிசை சில நாட்களுக்கு முன்னர் கூறினார். தமிழிசையின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று ஸ்டாலின் கூறிய போதும் தம்மிடம் ஆதாரம் உள்ளதாக தமிழிசை அழுத்தமாகக் கூறிவருகிறார். தற்போது காங்கிரஸ் பக்கம் இருக்கும் ஸ்டாலினைத் தன் பக்கம் இழுக்க சந்திர சேகரராவ் முயல்வதாக கிசுகிசுக்கள் வலம் வருகின்றன.