கொடைக்கானல்: கொடைக்கான லில் கவரிங் கடையில் வேலை பார்க்கும் மல்லிகா, 25, என்ற மாதிடம் பணம் கடன் வாங்கிய சசிகுமார், 30, என்பவர் கடனை அடைக்காமல் ஏமாற்றி வந்தார்.
ஒருநாள் தான் பணம் தயார் செய்துவிட்டதாகவும் வத்தலக் குண்டு வந்து பணத்தை வாங் கிக்கொள்ளும்படியும் சசிகுமார் கூறியதைக் கேட்டு அங்கு சென்ற மல்லிகாவை அவர் பாலியல் பலாத்காரத்துக்கு உட் படுத்தி அதைப் படம் எடுத்து வைத்துக்கொண்டு மல்லிகாவை மிரட்டத் தொடங்கினார்.
கொடுத்த பணத்தைக் கேட்டால் காணொளி வெளி யிடப்படும் என்று மிரட்டிய சசி குமாருக்கு எதிராக மல்லிகா போலிசில் புகார் செய்தார்.
சசிகுமார் கைதானார். விசாரணை நடப்பதாக போலிஸ் தெரிவித்துள்ளது.

