முறையான பதிவு இல்லாத மருத்துவ நிலையங்கள் மூடல்

1 mins read

சென்னை: தமிழ்நாட்டில் சுகா தாரத் துறையில் முறையாகப் பதியப்படாத மருத்துவமனை கள், மருந்தகங்கள், தாதிமை விடுதிகள் ஆகியவற்றை மூடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளள.

தமிழகத்தில் உள்ள மருத்து வம் சார்ந்த நிறுவனங்கள் எல் லாம், 2018 தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் தங்களைப் பதிந்து இருக்கவேண் டும் என்பது கட்டாயமானது.

இதற்கான காலக்கெடு இம் மாத இறுதிவரை நீட்டிக்கப்பட் டுள்ளதாக மருத்துவச் சேவைகள் இயக்குனரகம் தெரிவித்தது.

இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்தால் மட்டுமே மருந்தகங் கள், மருத்துவ ஆய்வகங்கள், தனியார் மருத்துவமனைகள், தாதிமை விடுதிகள் எல்லாம் தொடர்ந்து இயங்க முடியும்.

சென்னையில், மருத்துவச் சேவைகள் இயக்குனரகத்தின் குழுக்கள் இது தொடர்பான சோதனையில் ஈடுபட்டுள்ளன.